Sunday, March 27, 2011

வாராய் கண்ணா


நாராயணா நமோ நாராயணா 
நாராயணா நமோ நாராயணா 

ஆரா அமுதே நாராயணா 
   அழகிய கண்ணா நாராயணா 
தீரா வினைகளைத் தீராய் கண்ணா
   திருமகள் துணையுடன் வாராய் கண்ணா 
                                                                                                (நாராயணா)  1 

மண் அள்ளித் தின்றாய் நாராயணா 
   மாபலி கொன்றாய் நாராயணா 
கண்மணி ராதையின் காதல் மன்னா 
   கனிவுடன் என்முகம் பாராய் கண்ணா 
                                                                                                (நாராயணா)  2

வாமனன் உருக்கொண்டாய் நாராயணா 
   வான்புவி அளந்தாய் நாராயணா 
இராமனாய் வந்தாய் நாராயணா 
   தாமதமின்றி வாராய் கண்ணா 
                                                                                                  (நாராயணா)  3

ஸ்ரீலங்கா வென்றாய் நாராயணா 
  சீதையை மீட்டாய் நாராயணா 
ஸ்ரீரங்க நாதா நாராயணா 
   ஸ்ரீதேவி அருள்தரச் சொல்வாய் கண்ணா 
                                                                                                  (நாராயணா ) 4

இராவணன் அழித்தாய் நாராயணா 
   இரணியனைப் பிளந்தாய் நாராயணா 
வராகமாய் வந்தாய் நாராயணா 
   வளம்பெற வரம்தா நாராயணா 
                                                                                                      (நாராயணா) 5

கிருஷ்ணராய் வந்தாய் நாராயணா 
   கீதையை தந்தாய் நாராயணா 
அருச்சுனன சாரதி நாராயணா 
   அகத்தேர் ஏறிடு நாராயணா 
                                                                                                       (நாராயணா) 6

பரசுராம் ஆனவா நாராயணா 
   பலராம் ஆனவா நாராயணா 
நரசிம்மம் ஆனவா நாராயணா 
   நலம்தர வருவாய் நாராயணா 
                                                                                                       (நாராயணா)7

தூணாய் இருந்தாய் நாராயணா
   துரும்பிலும் இருப்பாய் நாராயணா
மீனாய் பிறந்தாய் நாராயணா
   மீண்டும் வருவாய் நாராயணா
                                                                                                       (நாராயணா)8

கூர்மமாய் வந்தாய் நாராயணா 
   கோகுல வாசா நாராயணா 
கார்முகில் வண்ணா நாராயணா 
   கல்கியாய் வருவாய் நாராயணா 
                                                                                                       (நாராயணா)9

ஆண்டாள் மாலையை ஏற்றாய் கண்ணா 
   ஆழ்வார் திருமொழி கேட்டாய் கண்ணா 
பாண்டவர் துயரங்கள் தீர்த்தாய் கண்ணா 
   பாமரன்  துயரங்கள் தீர்ப்பாய் கண்ணா 
                                                                                                      (நாராயணா)10

வேங்கட நாதா நாராயணா 
   வேலவன் மாமா நாராயணா 
தாங்கிட வருவாய் நாராயணா 
    தாள்மலர் பணிந்தோம்  நாராயணா
                                                                                                      (நாராயணா)11

சங்கேந்தும் ஆண்டவா நாராயணா
   சக்கரம் பூண்டவா நாராயணா 
எங்கேயும் இருப்பாய் நாராயணா 
   என்னுள்ளும் இருப்பாய் நாராயணா 
                                                                                                      (நாராயணா)12

பாற்கடல் வாசா நாராயணா 
   பாம்பணை கொண்டவா நாராயணா 
ஏற்கவா என்கவி நாராயணா 
    என்துயர் போக்கவா நாராயணா 
                                                                                                      (நாராயணா)13

கோதண்ட ராமா நாராயணா 
   கோபாலா வைகுந்தா நாராயணா 
பாதங்கள் பணிந்தேன் நாராயணா 
    பாவங்கள் அழிப்பாய் நாராயணா 
                                                                                                                   
                                                                                                     (நாராயணா)14

மாதவா ஸ்ரீதரா நாராயணா 
   மாலவா ராகவா நாராயணா 
ஆதர வளிப்பாய் நாராயணா 
    அருள்மழை பொழிவாய் நாராயணா 
                                                                                                                    
                                                                                                    (நாராயணா)15
      



பாடலை இசையமைத்துப் பாடியிருப்பவர், என் கவிதைகளின் ரசிகர் , பெருமதிப்பிற்குரிய அய்யா சுப்புரத்தினம் அவர்கள்.  


                      

16 comments:

மோகன்ஜி said...

நாராயண மந்த்ரம் அதுவே நாளும் பேரின்பம்.
இலகுவான சந்தம்.
இலேசான வார்த்தைகள்.
கருடன் மீதேற்றி விண்ணகரம் காட்டிவிட்டாய் தம்பி.
மீண்டும் படிக்க வேண்டும்.வரவா?

சிவகுமாரன் said...

அண்ணா வாங்க வாங்க
எங்கே போயிருந்தீங்க இவ்வளவு நாளா?

தமிழ் said...

வார்த்தைகள் அருமை

கண்டிப்பாக வருவான்

meenakshi said...

எளிமையான வார்த்தைகளை கொண்டு மிகவும் அழகாய் இருக்கிறது பாடல். வாழ்த்துக்கள்!

thendralsaravanan said...

அருமை அருமை அருமை!
கண்ணன் வருவான்!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

சொல்ல சொல்ல இனிக்குதடா முருகனுக்கு மட்டுமல்ல நாராயண நாமத்துக்கும் பொருந்தும் என மற்றும் ஒருமுறை புரிய வைத்துள்ளீர்கள்... நன்றி... மனதை கொள்ளை கொள்ளும் பால கண்ணன் படம்... நன்றி...:)

sury siva said...

தங்களது ஆரா அமுதே நாராயணா என்னும் பாடலை ஹிந்தோளம் என்னும் ராகத்தில் பாடி இருக்கிறேன். பாடல் தொடர்பு இங்கே இருக்கிறது.
http://www.youtube.com/watch?v=Q0AlqjcoxoU
பாடல் எளிய நடையில் இருப்பது அதன் சிறப்பு ஆகும். உங்களுடைய பாடல்கள் சந்தங்களுக்கு ஏற்ப அமைந்துள்ளதால் மெட்டு அமைப்பதில் உற்சாகம் அடைகிறேன்.
நாராயண என்று உச்சரித்தாலே போதும். அது நமக்கு எல்லா நன்மைதனையும் செய்யும்.
சுப்பு ரத்தினம்.

Unknown said...

மனதை மயக்குகிறது !

கண்ணன் வந்ததும்,அருள் தந்ததும், உங்கள் ஒவ்வொரு கவிதையிலும், ஒவ்வொரு வார்த்தையிலும் தெரிகிறது.

அப்பாதுரை said...

சுப்புரத்தினம் ஐயாவின் முயற்சி பாராட்டுக்குரியது.
'ஸ்ரீலங்கா வென்றாய்' - அடடே!

Kavinaya said...

எளிமையான அழகான பாடலுக்கு சுப்பு தாத்தாவின் இசை மேலும் மெருகூட்டுகிறது.

Vivekraj said...

சூப்பர் . குரல் அழகாக இருக்கிறது .

தமிழ் said...

அருமை அய்யா

இராஜராஜேஸ்வரி said...

நாராயணா !நாராயணா!!
நாவினிக்க நற்கவி தந்த தங்களுக்கு வாழ்த்துக்கள்.

ஜீவி said...

எளிமையான அதே நேரத்தில் அர்த்தம் நிறைந்த வரிகள். எல்லோரும் சேர்ந்து கோரஸாகப் பாடினால், எவ்வளவு அற்புதமாக இருக்கும் என்று
தனியொருவனாய் மனத்துக்கிசைந்த வரிகளை முணுமுணுத்துப் பார்க்கையில் நினைக்காமல் இருக்க முடியவில்லை.

இறையனுபவத்தை இசைப்பாடல்களில் தரும் தங்களுக்கு மிக்க நன்றி,சிவகுமாரன்!

இராஜராஜேஸ்வரி said...

நாராயண ..நாராயண..நாராயணா..

Nanjil Siva said...

ஜெய் ஸ்ரீராம் .. !! >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<