Friday, March 22, 2013

தாக்குவாய்



கொஞ்சுதமிழ் பாட்டெழுதி
   கூவி அழைத்துன்னை
கெஞ்சுகிறேன் என்குரல்
    கேளாயோ - செஞ்சடையா
தூக்கிய உந்தன்
    திருவடி பற்றினேன்
தாக்குவாய் வாட்டும்
     துயர்..
-சிவகுமாரன் 

10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

G.M Balasubramaniam said...


/ தூக்கிய உந்தன் திருவடி கொண்டெனைத் தாக்குவாய்/ மார்க்கண்டேயனைக் காக்க யமனைத் தன் காலால் தாக்கினார் செஞ்சடையர் என்னும் கதை நினைவுக்கு வருகிறது.திருவடியை நீங்கள் பற்றுங்கள். அவர் ஏன் தாக்கவேண்டும்.?

ஜீவி said...

அருட்கவிகள் வார்த்தை அமைப்பில் கவனமாய் இருக்க வேண்டாமோ?..
இதைப் பற்றி கண்ணதாசன் நிறையச் சொல்லியிருக்கிறார்.

தூக்கிய நிந்தன்
திருவடியே எஞ்ஞான்றும்
துன்பங்களுக்கு மலராகும்
அரண்

-- என்கிற மாதிரி உங்கள் பாவரிகளில் வெண்பாவாக்கலாம்.

சிவகுமாரன் said...

நன்றி தனபால்
சார்.
நன்றி GMB சார்
நன்றி ஜீவி சார்.
தூக்கிய திருவடிஎன்பது அபயம் அளிப்பது.
தாக்குவாய் என்பதை ஆட்கொள்வாய் என்னும் பொருளில் எழுதினேன். முன்பொரு முறை நெற்றிக் கண்ணைத் திறவாய் என்று எழுதினேன். காம தகனத்தின் பொருள் மும்மலம் எரிப்பது. அது போன்று பொருள்படும் என்ற எண்ணத்தில் எழுதிய வரிகள். இன்னும் சொல்லப் போனால் எழுதிய என்று சொல்வது கூட தவறு. இந்த வெண்பாவை காகிதத்தில் ஒரு வரி கூட எழுதிப் பார்க்கவில்லை. ஐந்து நிமிடங்களில் எழுதி( தட்டச்சு செய்து ) பதிவேற்றினேன்.
வரிகளை மாற்றி விட்டேன். தயவு செய்து பொறுத்தருள்க.

ஜீவி said...

//தாக்குவாய் வாட்டும்
துயர்.. //

வினாடியில் வேண்டிய மாற்றம்!

இதான் சிவகுமாரன்!

அப்பாதுரை said...

பாடலும் பின்னூட்டமும் சுவாரசியம்.
திருவாசக தேவாரப் பாடல்களில் சிவனின் தாக்குதலை வேண்டிப் பாடியுள்ளார்களே?

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே http://blogintamil.blogspot.in/2013/05/blog-post_31.html) சென்று பார்க்கவும்... நன்றி...

the poles "colonelpaaganesanvsm.blogspot.com" said...

நன்றி நண்பர் சிவகுமார் அவர்களே.
கடல் கடந்து பணியாற்றும் தங்களின் தமிழ் அற்புதமாக உள்ளது.
'அருட்கவி" படித்தேன்.
வாழ்த்துக்கள்.

சிவகுமாரன் said...

மிக்க நன்றி கர்னல் அய்யா

Nanjil Siva said...

தாக்குவாய் வாட்டும்
துயர்.. நீங்கட்டும் உங்கள் துயர் !!! >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<