Sunday, May 29, 2011

அருணை மலையின் ஒளியே


அருணை மலையின் ஒளியே - திரு 
   ஆலவாயின் மணியே
    அண்ணா மலையே அரசே - திரு
    ஆரூர் ஆண்ட முரசே.
கருணைக் கடலே சிவமே -உயர் 
   கயிலை மலையின் பரமே -அன்று
   காமனை எரித்த விழியை - கொஞ்சம் 
   காட்டி எனக்கு அருள்வாயே ,                          (அருணை மலையின்)

இருளில் கிடந்து தடுமாறி 
   ஏங்கித் தவிக்கும் அடியேனின் 
   இன்னல்கள் தீர்த்து மனமிரங்கி 
   இன்னருள் காட்ட வருவாயே.
அருளைக் காட்டி அணைப்பதற்கு   
   அரனே உனக்கு மனமில்லையோ ?
   ஆலம் உண்ட அருட்திரளே
   அண்ணா மலையே அருள்வாயே.               (அருணை மலையின்)

பொருளைக் கேட்கும் புவி மீதில் 
   பொன்னே உனது அருள் கேட்டேன்.
   போற்றிப் புகழ்ந்து எனது உயிர் 
    போகும் வரை நான் உனைத் தொழுவேன்.
குருவே மணியே குணநிதியே 
   கூடல் ஆண்ட அருள்நிதியே 
   கூற்றை உதைத்த பதமிரண்டை
   கூவிப் பிடித்தேன் அருள்வாயே                (அருணை மலையின்)
                             
                                                                     
                                                                                                   -சிவகுமாரன் 


சிவநாமத்தை ஜெபித்துக்கொண்டு இந்தக் குரல் பதிவை கேட்கவும். 18 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

அண்ணாமலைக்கு அரோஹரா !

தென்னாடுடைய சிவனே போற்றி
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி.

அண்ணாமலையார் பற்றி எழுதியுள்ள பாடல் அருமை. பாராட்டுக்கள்.

G.M Balasubramaniam said...

அன்பு சிவகுமார காமனை எரித்தவன் கண் உன் மீது படலாமா. ?விளைவு களை எங்களால் தாங்க முடியுமா.?

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

வணக்கம் சிவகுமாரன்,

//அருளைக் காட்டி அணைப்பதற்கு
அரனே உனக்கு மனமில்லையோ ?//

உண்மைதான் அருளாளர்களும் இப்படித்தான் பாடுகிறார்கள்,

ஆண்ட நீ அருள் இல்லையானால் ஆரிடம் நோகேன் ? என்பது திருவாசகம்.

வாழ்த்துக்கள்...

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

வணக்கம் பாலசுப்பிரமணி ஐயா,

//அன்பு சிவகுமார காமனை எரித்தவன் கண் உன் மீது படலாமா. ?விளைவு களை எங்களால் தாங்க முடியுமா.//

எல்லோருமே சிவபெருமான் என்றால் அழிக்கும கடவுள் என்று நினைக்கிறார்கள்.

உண்மையில் அவர் அழிப்பது நம்மிடத்தில் உள்ள ஆணவத்தை மட்டும் தான்...

சிவபெருமான் கருணைக்கடல்..
குழந்தை அழுதது என்பதற்காக பாற்கடல் கொடுத்த பரம்பொருள்..

மேலதிக தகவல்களுக்கு ஓய்விருக்கும்போது எமது தளத்திற்கு வருகை தாருங்கள்.

நன்றி.

http://sivaayasivaa.blogspot.com

அன்பன். சிவ.சி.மா.ஜா

இராஜராஜேஸ்வரி said...

குருவே மணியே குணநிதியே
கூடல் ஆண்ட அருள்நிதியே
கூற்றை உதைத்த பதமிரண்டை
கூவிப் பிடித்தேன் அருள்வாயே //
அருணையின் கருணைக்கடல்
அற்புதமாய். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

Lalitha Mittal said...

porul ketkaammal ponnin[sivanin] arul ketpathu azhagaaga irukku!

sivan unakkaga en bloggil inimaiyaana chandhra sekaraashtaga mettil oru bajanaippaattudan kaatththindirukkaar!neram kidaikkumpothu vanthu kettukkol!

மோகன்ஜி said...

திருவண்ணாமலைப் பற்றி இந்து சிந்தித்துக் கொண்டிருந்தேன். உன் பாடல்
ரீங்கரிக்கறது என்னுள்.. மனம்நிறைந்து வாழ்த்துகிறேன் சிவா!

அப்பாதுரை said...

எனக்குத் தோன்றியதை பால்சுப்ரமணியன் சொன்னாரே என்று பார்த்தால் தொடர்ந்து ஜானகிராமனின் விளக்கம். சுவாரசியம்.

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

வணக்கம் சிவகுமாரன்,

ஒரு வேண்டுகோள்...

இன்றுதான் தங்களது தளத்தின் தலைப்புப் பகுதியை கூர்ந்து கவனித்தேன்..

அதிலுள்ள வாசகம் திருமந்திரம் அல்லவா ?

அதை மாற்றாமல் சரியாகப் பயன்படுத்தினால் சிறப்பு தானே ?

எனவே,

என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே

என மாற்றிக் கொள்ளுங்களேன்.

நன்றி

அன்பன், சிவ.சி.மா.ஜா
http://sivaayasivaa.blogspot.com

சிவகுமாரன் said...

நன்றி வை.கோ சார்

சிவகுமாரன் said...

GMB சார். ஜானகிராமன் விளக்கம் அளித்திருக்கிறார்.பாருங்கள். காமதகனம், முப்புரம் எரிப்பது என்பது ஆணவம் , கன்மம், மாயை என்னும் மும்மலங்களை அழிப்பதே.
அது மட்டுமல்ல. சிவன் என்பவன் அழித்தல் தொழிலை மட்டும் செய்பவனல்ல. ஆக்கல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழிலும் அவன் மூலம் தான் நடைபெறுகிறது. மற்ற இரு துறைகளையும் (Department) பிறருக்கு கொடுத்துவிட்டு , அழித்தல் துறையை தன்னிடம் வைத்துக் கொண்டுள்ளான். முதல்வர், நிதி, பொதுப்பணி, கல்வி என்று தனித்தனி அமைச்சர்களுக்கு பிரித்துக் கொடுத்துவிட்டு , சட்டம் ஒழுங்கு & காவல்துறையை தன்னிடம் வைத்துக் கொள்ளவில்லையா ? அதற்காக அவரை போலிஸ் அமைச்சர் என்று சொல்லி விடுவீர்களா?
அதுபோல்தான் அழித்தல் Department தன்னிடம் , மற்றவை அவன் மேற்பார்வையில் பிறரிடம்.

சிவகுமாரன் said...

நன்றி.
ஜானகிராமன்
ராஜேஸ்வரி மேடம்
லலிதா மிட்டல் மேடம்
மோகன் அண்ணா
அப்பாஜி
நன்றி

உலக சினிமா ரசிகன் said...

எழுத்தாளர் சுஜாதா கதையை திருடி வெள்ளைக்காரர்கள் ஹாலிவுட் படமாக்கியிருக்கிறார்கள்.முழு விபரம் அறிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.

meenakshi said...

பாடல் வரிகளும், பின்னணி இசை எதுவும் இல்லாமல், பிசிறு தட்டாமல் அதை பாடி இருக்கும் விதமும் அருமை. வாழ்த்துக்கள்!

sury said...

கூவி பிடித்தேன் அருள்வாயே.
நானும் கூவுவேன். மூன்று ராகங்களில், புன்னாக வராளி, சஹானா மற்றும் தர்பாரி கானடா ராகங்களில் எனது வலையில் கூவுவேன், சற்று நேரத்தில். அண்ணாமலையே எனக்கு அருள்வாயே.
போற்றிபுகல்ந்து எனது உயிர் போகும் வரை நான் உனைத் தொழ வாய்ப்பு அளித்த சிவகுமாரனுக்கு நன்றி சொல்லுவேன்.
சுப்பு தாத்தா
www.youtube/pichuperan

sury said...

http://youtu.be/CKhjieE1TAk

Pl cut and paste the above URL to listen to the song.

subbu thatha

அம்பாளடியாள் said...

என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள்.....

காட்டான் said...

அருமை..அருமை வாழ்த்துக்கள் சிவனுடைய குமாரனே...

காட்டான் குழ போட்டான்..