வெண்பா
(அய்யனைத் தரிசிக்கும் வரை )
கோணேஸ் வராஉந்தன் கோல எழில்தன்னைக்
காணேனோ என்னிருக் கண்களால் ? - வீணே
பிழைத்துக் கிடக்கின்றேன் , பெற்றவா என்னை
அழைத்துக் கொடுப்பாய் அருள்.
(அய்யனைத் தரிசித்த பின் )
கோணமலை ஈஸ்வரனின் கோல எழில்தன்னைக்
காணவந்தேன் , பேரருளில் கட்டுண்டேன் - வீணடைந்து
போகாதென் வாழ்க்கை ! பொலிந்திடச் செய்திடுவான் !
ஆகா அவனே அரன் (ண் ).
-சிவகுமாரன்.
25.01.2024
@ திருகோணமலை